அமைச்சுக்களின் செயலர்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட முடியாது

பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன இல்லாத சூழ்நிலையில், தனது அதிகாரத்தின் கீழ் இல்லாத அமைச்சுக்களின் செயலர்களுக்கு, உத்தரவிடுவதற்கு சிறிலங்கா அதிபருக்கு அதிகாரம் கிடையாது என்று- முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

தனக்குக் கீழ் உள்ள அமைச்சுக்களின் செயலர்களுக்கு மட்டுமே சிறிலங்கா அதிபரால் தற்போது உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்.

ஏனைய அமைச்சுக்களின் செயலர்களுடன் அவர் கூட்டங்களை நடத்துவதோ, அவர்களுக்கு உத்தரவிடுவதோ அரசியலமைப்பு மீறலாகும்” என்று கூறினார்.