இன்றைய சதிமுயற்சிகளின் பின்னணி

2017 செப்ரெம்பர் மாதம் 30 ஆம்திகதி கிழக்கு மாகாண சபை உட்பட மூன்று மாகாணசபைகள் கலைக்கப்பட்டன.

எனினும் அதற்கு முன்னராக செப்ரெம்பர் 21ஆம்திகதிபாராளுமன்ற விதிமுறைகளுக்கு அப்பால் சட்ட நகல் ஒன்று அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்காவினால் கொண்டு வரப்பட்டது.

அது பெண்களின் அரசியல்பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோதாவில் மாகாணசபை தேர்தல்முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்ற விடயத்தை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டது.

அதன் பின்னணி ஒரு சதி முயற்சியாகவே சிறுபான்மை மக்களால் உணரப்பட்டது. காரணம் பாராளுமன்ற விதிமுறைகளை கவனத்தில் கொள்ளாது இது அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டமையும் இதற்கு கைதூக்கி ஆதரவு தெரிவித்தவர்கள் ஜனநாயக மரபுகளைக் கடைப் பிடிக்க தவறியமையையும் சொல்லாம்.

– இப்படித் தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதல் நஸிர் அஹமட். இன்றைய அரசியல் நிலைவரம் குறித்து அவரிடம் கருத்துக் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தத்தமது கட்சிகளின் வெற்றிகளைக் கருத்தில் கொண்டு செயற்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விகிதாசாரரீதியாக சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை கருவ றுக்கும் செயற்பாட்டுக்கே முன்னுரிமை அளித்தனர் அதுவே இச்செயற்பாட்டின் தார்ப்பரியமாக இருந்தது.

ஜனநாயகம்ரூபவ்பாராளுமன்றபாரம்பரியம்ரூபவ் அரசியல்அமைப்பு முறைமை என்பன குறித்து இன்று பெரும் வாய்ப்பேச்சுகளை நடத்துபவர்கள்ரூபவ் தம்மை சிறந்த ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்ள முற்படுபவர்கள் அன்று செய்தததை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

முன் அறிவிப்பு செய்து பாராளுமன்ற பாரம்பரிய முறைமைகளுக்கு உட்பட்டு உங்கள் தீர்;மானங்களை நிறைவேற்றுங்கள் அப்போது தான் அதனை அங்கீகரிக்கமுடியும் இன்று என்று கூறிவரும் ஜனாதிபதியும் அன்று கண்ணை மூடி பார்த்துக்கொண்டிருந்தார் என்பதே உண்மை யாகும்.

தேர்தல் முறைமை மாற்றம் என்பதன் ஊடாக எல்லை நிர்ணயத்தை கொண்டு வந்து அதனூடாக நாடெங்கிலும் செறிந்து வாழம் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைக்க முற்பட்ட நடவடிக்கையை நாம் எளிதில் மறந்திட முடியாது.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டதன் பின்னர் நான் ஐனாதிபதி யையும் பிரதமரையும் நேரில் சந்தித்து காலமாதம் இன்றி தேர்தலை நடத்துமாறு கோரிக்கைவிடுத்திருந்தேன். எனினும் அது திட்டமிட்டு பிற்போடப்பட்டு வந்தது.

இதன் விளைவே நல்லாட்சி அரசுக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கும் -இன்றைய முரண்பாட்டுநிலைக்கும் காரணமாகும்.

உள்ளுராட்சிமன்ற தேர்தல்களை கலப்பு முறையில் நடத்தி அதனூடாக கிடைக்கப் பெற்ற பெறுபேறுகள் இன்றைவரை பெரும் குழப்ப நிலையைஉருவாக்கியிருக்கின்றன என்பதே யதார்தமாகும்.

இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலையும் கலப்புமுறையில் நடத்த வேண்டும் என்பதில் நல்லாட்சி அரசு கொண்டிருந்த தீ முட்டல் நிலை இன்று அவர்களையும் அந்த தீ சட்டிக்குள் தள்ளியுள்ளது.

இங்கு தான் நாம் சற்று சிந்திக்கவேண்டும் எம்மை விட பெரிய சக்தி இருக்கிறது அது தகுந்த பாடம் வழங்கும் என்பது.

மக்கள் நலனைகளைப் பற்றி சிந்திக்காது தத்;தமது கட்சிநலன்கள்; குறித்து சிந்திக்கும் அரசியல் தலைமைகளின் உண்மையான முகம் இப்போது மக்களுக்குதெரியவந்திருக்கிறது.

எனவே எமது மக்கள் இக்கால கட்டத்தை சரிவரப்புரிந்து கொண்டு அதற்கான வியூகங்களை வகுத்து செயற்பட முன் வரவேண்டும் – என்றார்.