மைத்திரிக்கு நெருக்கமானவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒவ்வாமை பிரச்சினை ஒன்று இருப்பதாக, அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை ஒரு வாரத்தில் தீர்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் இதில் எனக்கு நம்பிக்கையில்லை.

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது சகலருடன் இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதி கூறினார். தேர்தல் நெருங்கிய போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியைத் தரமாட்டேன் எனக் கூறினார்.

தற்பொழுதும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையும் முன்னையதைப் போன்றதாகும். ஜனாதிபதிக்கு பிரதமர்கள் தொடர்பில் ஒவ்வாமை தன்மையொன்று காணப்படுகிறது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டார்.