தேசியமட்ட அளவில் சாதனை படைத்த மட்டகளப்பு மாணவி

கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சின் அனுசரணையுடன் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடாத்திய கர்நாடக சங்கீத போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில்,

ஆரையம்பதி செல்வாநகரைச் சேர்ந்தவரும் ஆரையம்பதி இராம கிருஷண மிசன் மகாவித்தியாலய மாணவியுமான டனிஷா லோகநாதன் பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களில் முதலாம் இடத்தைப்பெற்று வெற்றிவாகை சூடியதுடன் 30.11.2018 அன்று நடந்த தேசிய ரீதியிலான நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.