கொழும்பின் புற நகர் பகுதியில் இது யாருடைய செயல்!! வௌியானது உண்மை..

கல்கிஸ்ஸ கல்தேமுல்லை சந்தியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக கொலை சம்பவம் அஞ்சு என்றழைக்கப்படும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவே மேற்கொண்டுள்ளது என முதல் கட்ட விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் நேற்றிரவு 9.20 அளவில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்துக்கொண்டு உந்துருளியில் வருகை தந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 30 வயதுடைய லஹிரு உதார என்ற இளைஞர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் ரொஹா என்ற அழைக்கப்படும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினர் என கண்டறியப்பட்டுள்ளது.

போதைபொருள் கொடுக்கல் வாங்கள்களினால் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் கிரிக்கட் வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தையை கொன்றதும் அஞ்சு குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்மலானையில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு முன்பாக சக நபர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி உந்துருளியில் வருகை இருவர் தனஞ்சய சில்வாவின் தந்தை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்.