மைத்­திரியை அடக்குவது யார்?? சூடுபிடிக்கும் உயர் நீதி­மன்­றம்..

நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்த அரச தலை­வ­ரின் அறி­விப்பை சவா­லுக்கு உட்­ப­டுத்தி அடிப்­படை உரிமை மனுக்­களை உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­வ­தற்­கான எந்­த­வொரு ஏற்­ப்பா­டு­க­ளும் இல்லை.

அர­ச­மைப்பை அரச தலை­வர் மீறி­யி­ருந்­தால், அதற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை நாடா­ளு­மன்­றத்­தி­னுள்­ளேயே மேற்­கொள்ள முடி­யும். இவ்­வாறு சட்­டமா அதி­பர் ஜயந்த ஜய­சூ­ரிய தனது சமர்ப்­ப­ணத்­தில் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்தை கலைத்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சி­தழ் அறி­விப்பை நவம்­பர் 9ஆம் திகதி வெளி­யிட்­டி­ருந்­தார்.

அத­னைச் சவா­லுக்கு உட்­ப­டுத்தி 13 மனுக்­கள் கடந்த மாதம் 12ஆம் திகதி உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டன.

இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்ட கடந்த மாதம் 13ஆம் திகதி இடைக்­கால கட்­டளை பிறப்­பிக்­கப்­பட்­டது.

மனு­தா­ரர்­கள் கோரி­ய­வாறு, அரச தலை­வ­ரின் அர­சி­தழ் அறி­விப்­புக்கு மன்று இடைக்­கா­லத் தடை விதித்­தி­ருந்­தது. வழக்கு மீதான விசா­ரணை, டிசெம்­பர் மாதம் 4, 5, 6ஆம் திக­தி­க­ளில் இடம்­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

கடந்த 13ஆம் திகதி மூன்று நீதி­ய­ர­சர்­கள் ஆயமே இடைக்­கா­லக் கட்­ட­ளையை வழங்­கி­யி­ருந்த நிலை­யில், 7 நீதி­ய­ர­சர்­க­ளைக் கொண்ட ஆயம் முன்­பாக இந்த வழக்கை விசா­ரிக்க வேண்­டும் என்று, இடை­புகு மனு­தா­ரர்­க­ளில் ஒரு­வ­ரான ஜி.எல்.பீரிஸ் கோரி­யி­ருந்­தார்.

இந்த நிலை­யில் 7 நீதி­ய­ர­சர்­க­ளைக் கொண்ட ஆயம் முன்­பாக மனுக்­கள் நேற்­று­முன்­தி­னம் காலை விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டன.

மனு­தா­ரர்­கள் தரப்­புச் சமர்ப்­ப­ணங்­கள் நிறை­வ­டைந்­தி­ருந்த நிலை­யில், சட்­டமா அதி◌­பர் தனது சமர்ப்­ப­ணத்தை நேற்று முன்­வைத்◌­த◌ார்.

அவர் மன்­றில் மேலும் தெரி­வித்­த­தா­வது,

அரச தலை­வர் அர­ச­மைப்­புக்கு உட்­பட்டே நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­த­துள்­ளார். அரச தலை­வர் நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை மனித உரிமை மீறல் மனுக்­களை விசா­ரணை செய்­வ­தற்கு எவ்­வி­த­மான அதி­கா­ரங்­க­ளும் இந்த மன்­றுக்கு இல்லை என்ற நிலைப்­பாட்­டி­லேயே நான் இருக்­கின்­றேன்.

அரச தலை­வர் அர­ச­மைப்பை மீறு­கின்ற சந்­தர்ப்­பத்­தில் எடுக்க வேண்­டிய நட­வ­டிக்கை சம்­பந்­த­மாக அர­ச­மைப்­பின் 38 (2) அ சரத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அந்­தச் சரத்­தின் பிர­கா­ரம் அரச தலை­வர் அர­ச­மைப்பை மீறி இருந்­தால் அதற்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்­தி­லேயே தீர்­மா­னம் எடுக்­கப்­பட வேண்­டும்.

அந்­தத் தீர்­மா­னம் உயர்­நீ­தி­மன்­றத்­துக்கு அனுப்­பட்­டால் மாத்­தி­ரமே அதனை உயர் நீதி­மன்­றம் விசா­ர­ணைக்கு எடுக்க முடி­யும்.

அரச தலை­வர் அர­ச­மைப்பை மீறி­யி­ருந்­தால் மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் குற்­ற­வி­யல் தீர்­மா­னம் கொண்டு வந்து நிறை­வேற்­று­வ­தன் மூலம் அவ­ரைப் பத­வி­யி­லி­ருந்து நீக்க முடி­யும், என்று குறிப்­பிட்­டார்.

சட்­டமா அதி­ப­ரின் சமர்ப்­ப­ணங்­க­ளைத் தொடர்ந்து, இடை­புகு மனு­தா­ரர்­க­ளின் சமர்ப்­ப­ணங்­கள் இடம்­பெற்­றன. விசா­ரணை இன்­றும் தெட­ர்ந்தது.

ஒட்டு மொத்தத்தில் இன்றைய சூழலில் ஜனாதிபதியை யார் கட்டுப்படுத்துவது பாராளுமன்றத்தின் அதிகாரம் என்ன என்பது தொடர்பில் வாதம் நீள்கிறது.

அடுத்து என்ன நடக்கும் நாளை மறுதினம் தெரியும்..