விஜயகலாவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கை விசாரணை செய்த நீதவான், பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை விஜயகலா மகேஸ்வரன் கடந்த ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கமென சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்தார். இவ்வாறு அவர் உரையாற்றியமை பெரும் சர்ச்சையை இலங்கை அரசியலிலும் மக்களிடத்திலும் ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.