வவுனியாவில் இடம்பெற்ற விபத்து! பெண்ணிற்கு ஏற்பட்டுள்ள நிலை?

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிசென்ற டிப்பர் வாகனம் செட்டிகுளம் தபால்நிலையத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த போது குறித்த வீதி வழியே மாடுகளை கலைத்துசென்ற நிலையில் வயோதி பெண்ணை மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றபட்டார். காலில் பலத்தகாயம் ஏற்பட்டமையால் அவருடைய ஒரு கால் நேற்று அகற்றபட்டுள்ளது.

டிப்பர் ஓட்டுநர் செட்டிகுளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.