இலங்கையில் இரு பிள்ளைகளின் தாய்க்கு வீதியில் நேர்ந்த கொடூரம்

பண்டாரவளை நகரில் முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் பண்டாரவளை - இனிகம்பெத்த பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெறும் போது அந்த பெண்ணுடன் பயணித்த மற்றைய நபர் காயமடைந்து பண்டராவளை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதியை கைது செய்துள்ள பண்டாரவளை காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை, குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளது.