கடவுச்சீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு எந்த இடம் தெரியுமா?

உலக நாடுகளில் கடவுச்சீட்டு தரப்படுத்தல் பட்டியலில் இலங்கையின் கடவுச்சீட்டு 84 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இப் பட்டியலில் முதலாம் இடத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முதலாம் இடத்தையும், இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜேர்மன் நாடுகளும், மூன்றவாது இடத்தில் டென்மார்க், சுவீடன், பின்லாந்து, லக்ஷம்பெர்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெய்ன், நோர்வே, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இலங்கை கடந்த ஆண்டு 93 ஆவது இடத்தில் இருந்தது. இந் நிலையில் இவ் ஆண்டு 9 இடங்களிலிருந்து முன்னேறி 84 ஆவது இடத்தை பெற்றுள்ளது. அத்துடன் லெபனான் மற்றும் லிபியா நாடுகளும் 84 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையானது 16 நாடுகளுக்கு விசா அற்ற வசதியை வழங்குவதுடன் 21 நாடுகளுக்கு வருகைக்குப் பின்னர் விசா வழங்கும் சேவையை வழங்கி வருகின்றது. மேலும் 153 நாடுகளுக்கு இலங்கையில் விசா பெறுவது கட்டாயமாகவும் உள்ளது.