தமிழ் மாணவியைக் கடத்திச்சென்ற ஆசிரியர் இடம் மாற்றம்! மக்கள் விசனம்

களுவங்கேணி பாடசாலையில் கல்விகற்பித்து தமிழ்மாணவியைக் கடத்திச்சென்ற ஆசிரியர் றஸ்மி மீண்டும் முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்ண மிசன் தமிழ் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இடமாற்றமானது மீண்டும் மீண்டும் மக்களிடையே கோபத்தை உண்டு பண்ணும் செயல் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த இஸ்லாமிய ஆசிரியரை ஏன் முஸ்லிம் பாடசாலை ஒன்றிற்கு இடம் மாற்றக்கூடாது எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

அதுமட்டுமல்ல மீண்டும் இவர் தமிழ்பாடசாலையில் கல்விகற்பிப்பது அவருடைய பாதுகாப்பினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் இதர தமிழ் ஆசிரியர்களுடன் இவரும்! இவருடன் அவர்களும் எவ்வாறு பணி புரிவார்கள் எனவும் மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

இந்த இடமாற்றத்தை தொடர்ந்து வரப்போகும் பல பிரச்சினைகளைத் தடுத்து நிறுத்தும் முகமாகவும் மாகாண கல்விப்பணிப்பாளரின் கவனத்திற் கொண்டுசெல்லவும் இன்றுகாலை முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஷ்ண மஹாவித்தியாலைய முன்றலில் மீண்டும் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அவ்வூர் இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.