மைத்திரி- மஹிந்த கூட்டணி தோற்றம்!: பந்துல குணவர்தன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை உள்ளடங்கிய பாரிய கூட்டணியொன்று எதிர்வரும் தேர்தலுக்காக தோற்றம் பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெளியாகும் தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இக்கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன் ஏனைய சில கட்சிகளும் இணைவதற்கு தயாராக உள்ளதாகவும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

ஆகையால் நடைபெறவுள்ள தேர்தலில் அதிக வாக்குகளை நாங்கள் நிச்சயம் பெறுவது உறுதியெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் மக்களின் வாக்குகளை பெறமுடியுமென்றால் விரைவாக தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுகின்றோமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.