காதலியை அழைத்து சென்ற காதலன் செய்த மோசமான செயல்....அச்சத்தில் நடுநடுங்கிய யுவதி! இறுதியில் நடந்த அதிரடி

யுவதியொருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி அச்சுறுத்தி கப்பம் பெற முற்பட்ட இளைஞரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆடிஅம்பலம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கட்டுநாயக்க ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் யுவதியொருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

பின்னர் , பல சந்தர்ப்பங்களில் கைப்பேசியூடாக யுவதியின் நிர்வாணப்புகைப்படங்களை இளைஞர் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் , ஒருநாள் யுவதியை கைப்பேசியில் அழைத்து மினுவங்கொடை நகருக்கு வருமாறு குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

பின்னர் , அங்கு வந்த யுவதியை தனது நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி , விடுதி அறையொன்றுக்கு குறித்த இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார்.

எனினும் , அதற்கு கடும் எதிர்ப்பினை யுவதி தெரிவித்துள்ளதை தொடர்ந்து மீண்டும் மினுங்கொடைக்கு யுவதியை குறித்த இளைஞர் அழைத்து வந்து விட்டுள்ளார்.அதனை தொடர்ந்து , சில நாட்களாக குறித்த இளைஞரை அந்த யுவதி புறக்கணித்து வந்துள்ளார்.

இதனால் , கோபமுற்ற இளைஞர் யுவதியை கைப்பேசியில் அழைத்து தன்னிடம் உள்ள நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றப் போவதாக அச்சுறுத்தியுள்ள நிலையில் , அவ்வாறு செய்யாதிருக்க வேண்டுமானால் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவினை தருமாறு கோரியுள்ளார்.

பின்னர் , குறித்த புகைப்படங்களை யுவதியின் தோழிக்கு அந்த இளைஞர் அனுப்பியுள்ள நிலையில் , அது தொடர்பில் தோழி யுவதிக்கு அறிவித்துள்ளார்.குறித்த சம்பவத்தை தொடர்ந்து யுவதி காவற்துறையில் இளைஞருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை ஏற்ற காவற்துறையினர் இளைஞரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் 21 ம் திகதி வரை இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.