அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக வீ.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம்

விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக ரவிந்திர சமரவீரவும் , துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லாஹ மஹ்ரூப்வும் இதன்போது பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இதனிடையே அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி , அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு குறிப்பிட்டுள்ளது.