ஹிஸ்புள்ளாக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எச்.எம் ஹிஸ்புள்ளாக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று 11 ஆம் திகதி வாழைச்சேனை கிண்ணையடியில் பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அங்கு கூடிய மக்கள் இனவாதம் கதைக்கும் ஹில்புல்லா அவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கியதை கண்டிப்பதாகவும் உணர்வால் ஒன்றிணைய இன வாதத்தை ஒழிப்போம் தமிழர்களை மீண்டும் மீண்டும் அழிக்காதே இந்துக் கோயிலை இடித்தவனுக்கு ஆளுநர் பதவியா என பல்வேறு வாசகங்கள் ஏந்திய வண்ணம் அவர்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.