இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு பறந்த மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி எதிர்வரும் 15ஆம் திகதி அங்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஒருவர் பிலிப்பைன்ஸிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் ஜனாதிபதி அங்கு தங்கியிருக்கவுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.