ஹட்டன் நோக்கி புறப்பட்ட பேருந்து சற்று முன் விபத்து!

நல்லதன்னிய பிரதேசத்திலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று சிறிய பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இன்று மாலை 04 மணியளவில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.விபத்தில் எந்த நபருக்கும காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன் விபத்தில் பாரவூர்தி பாரிய சேதமடைந்துள்ளது.

பேருந்தின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் காவற்துறை தெரிவித்துள்ளது.