நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பொழிய கூடும்

இன்று மாலை நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய ஊவா , மத்திய, தென், சபரகமுவ மாகாணங்கள், பொலன்னறுவ, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரை கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை உட்பட ஹம்பாந்தொடை மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தெடை மாவட்டங்களில் இடைக்கிடை 40 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் என அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.