கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு முதலாவது பெண் துணை வேந்தர் நியமனம்!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் துணை வேந்தராக கலாநிதி.சந்திரா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவரை குறித்து தெரிவிக்கையில், நான் கலை கலாசார பீடாதிபதியாக பணியாற்றிய காலங்களில் பல விடயங்களில் கருத்தொருமித்த செயல்பாடுகள் ஒத்துழைப்பு மிக்கவர்.

இதேவேளை, என் நாடகங்களின் ரசிகை கலைகளில் அவரது ஈடுபாடு பல்கலைக் கழகத்தை புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் சந்திரா ஒரு ஆளுமையுள்ள ஒரு அறிவுஜீவி. அவர் விரிவுரையாளராக துறைத் தலைவராக பணியாற்றியதை பார்த்திருக்கிறேன் துணிச்சல் மிக்க பெண்.

இவர் காலத்தில் கிழக்குப் பல்கலைக் கழகம் புத்தெழுச்சி காணட்டும். தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் எங்கள் மகளை இழந்த போது என் மனைவிக்கு மிக்க ஆறுதலாய் துணை நின்றவர்.பல்கலைக் கழக ஆசிரியர் விடுதியில் தங்கியிருந்த காலை அவர் நட்பும் அன்பும் மறக்க முடியா நினைவுகள். என சமூக வலைதளங்களில் அவரை வாழ்த்தி வருகின்றனர் சமூக வாசிகள்.