போரதீவுப்பற்று பிரதேச மக்களே இது உங்கள் கவனத்திற்கு!

பெரிய போரதீவு பிரதான பாதையில் பழுகாமத்தை சேர்ந்த ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சமூகவாசிகள் தெரிவித்துள்ளார்.

பெரிய போரதீவு பிரதான பாதையில் இன்று மாலை வேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான பல உயிரிழப்புக்கள் மேலும் இடம்பெற பல வாய்ப்புக்கள் உள்ளது. இதனை தடுக்க மக்கள்தான் முன்வரவேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களின் கூடாக சமூகவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற கொடூர விபத்துக்களை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் மக்கள் வீதியில் இறங்கி மண் பினாமிகளின் வாகனங்களை இந்த சாலையில் செல்லாத முறையில் தடுக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடங்களை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.