பொங்கல் நாளில் புதிய மாணவர் சேர்க்கை! கொந்தளிப்பில் சமூகவாசிகள்

கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலையம் 16.01.2019 புதிய மாணவர்களை பதிவு செய்ய அழைத்துள்ளது.

உலகம் முழுவதும் தமிழர் திருநாள் கொண்டாட்டமாய் தமிழர் வீடுகள் புத்தாண்டாய் புதுப் புனலாய் மகிழ்வின் கணங்களை சுவைக்கும் காலம்.

பொங்கல் என்பது ஒரு நாள் நிகழ்வல்ல இரண்டு மூன்று நாட்கள் தொடரும் தமிழர் பண்பாட்டு திரு நாளாகும்.

16.01.2019 பட்டிப் பொங்கல் நாள் காலையில் மாட்டுப் பொங்கலாக விழவு கண்டு மாலையில் பட்டிக் காலைகளில் பொங்கலிட்டு மகிழ்வது கிழக்கு மாகாணத்தில் தொடரும் தனித்துவ பண்பாட்டு புதையலாக காணப்படுகிறது.

தமிழ் நாட்டில் மூன்று நாள் அரச விடுமுறை கனடாவில் தமிழ் மரபுரிமை மாதமாய் தை ஐரோப்பிய நாடுகளில் தமிழர் திருநாளாய் அலங்காரம் பெறும் நாட்கள் இவை என கருத்தப்படுகிறது.

மேலும், இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் விபுலானந்தர் பெயரால் இயங்கும் நிறுவனம் பட்டிப் பொங்கல் நாளில் மாணவர் பதிவை வைத்திருப்பது கண்டிக்கத் தக்கது உடனடியாக தேதியை மாற்றி அறிவித்து விபுலானந்தருக்கு பெருமை செய்யுங்கள். என சமூகவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல பெற்றோர்களின் விருப்பம் வெகு தூர இடங்களில் இருந்து வருவோர் பொங்கல் நாளில் புறப்பட்டு வர வேண்டிய நிலையும் உள்ளது நம்மவர்களே நம் பண்பாட்டை மதிக்காத காலமால இது காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.