புதிய ஆளுநர்களிடம் ஜனாதிபதி விசேட வேண்டுகோள்

ஜனாதிபதி செயலகத்தினால் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத் தருமாறு புதிய மாகாண ஆளுநர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளுநர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இலக்காகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டங்கள் தொடர்பில் தமது தனிப்பட்ட கவனத்தை செலுத்தி பங்களிப்புகளை வழங்குமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களுக்கான சேவைகளை முறையாகவும் வினைத்திறனாகவும் வழங்குவதோடு அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அனைத்து புதிய ஆளுநர்களும் நேரடியாக தலையிடுவீர்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.