இலங்கையில் தந்தையை கொலை செய்த மகன்...பின் தாயின் மீது கொலவெறி தாக்குதல்! அதிர்ச்சி சம்பவம்

கருத்து முரண்பாட்டின் காரணமாக அம்பலந்தொட - அரவனமுல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பலந்தொட - பெரகம - அரவனமுல்ல பிரதேசத்தினை சேர்ந்த 57 வயதுடைய இரு பிள்ளகைளின் தந்தையே தனது மகனின் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதுடன், தாயையும் தாக்கி, தாயின் முடியை வெட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

35 வயதுடைய சந்தேக நபரான மகன் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், சந்தேக நபரை தேடி அம்பலந்தொட காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.