இலங்கையில் நாய்களிடமிருந்து பரவும் மர்ம நோய்! மக்களே அவதானம்

இலங்கையில் முதல் முறையாக நாய்களிடமிருந்து பரவக் கூடிய ஒருவகை நோய் இனங்காணப்பட்டுள்ளமையால் மக்களை அவதானமாக செயற்படுமாறு பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

குறித்த நோய் இதுவரை காலமும் தென்னாபிரிக்கா நாடுகளிலேயே அதிகளவு பரவலாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட நாயொன்று பேராதனை கால்நடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நாயை சோதனைக்கு உடபடுத்தியபோது, ட்ரை-பெனசோமா (Trypanosoma) என்ற நோய் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக பேராசிரியர் தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த நோய் மக்களுக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தாத போதிலும் தோள் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளமையால் செல்லபிராணியாக நாயை வளர்க்கின்றவர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.