ஆச்சரியத்தை ஏற்படுத்திய தமிழ் பேசும் அரசியல்வாதிகள்! வைரலாகும் புகைப்படம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இருவரும் ஒன்றாக ஒரே மேசையில் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் ஒன்று பேஷ்பு்ககில் வெளியாகியுள்ளது.

இருவேறு அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ள இரண்டு தலைவர்களும் ஒன்றாக மகிழ்ச்சியாக சாப்பிடுவது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அரசியலிலும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில், பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளான இவர்கள் அரசியலையும் தாண்டி நட்பு பாராட்டுவது மகிழ்ச்சிக்குரியது என சமூக வலைத்தளங்களில் இடப்பட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.