புதிய அரசியலமைப்பு இன்றேல் 20 ஆவது திருத்தமேனும் நிறைவேற்றப்பட வேண்டும்

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசியலமைப்பு நிபுணத்துவ குழு சமர்ப்பித்த அறிக்கையினை நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்தார்.

குறித்த அறிக்கையில் எவ்விடயம் குறிப்பிடப்படடுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளாமலே மஹிந்த தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து இனவாத கருத்துக்களை மாத்திரமே சாட்டினார்கள். ஆகவே இப்பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது சாத்தியமற்றது.

இன்றை அரசியல் நிலையில் புதிய அரசியலமைப்பு முக்கியம் ஆனால் அது முடியாத பட்சத்தில் மக்கள் விடு தலை முன்னணணியினர் சமர்ப்பித்த 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடான நிறைவேற்று அதி காரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினையாவது நீக்கவேண்டும்.

30வருட சிவில் யுத்தத்திற்கு பிரதான காரணம் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப் பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசியலமைப்பு நிபுணத்துவ குழுவினர் சமர்பபித்த புதிய அரசியலமைப்பு நகல் தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

உருவாக்கப்பட்டால் நாடு பிளவடையும் என்று குறிப்பிட்டுக் கொண்டு பொதுஜன பெரமுன முன்னணியினர் அரசியல் செய்வது வெட்கப்பட வேண்டியது.

இன்று நாட்டில வாழும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் அவை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தவே புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தயார்படுத்தல் முன்னெடுக்கப்பட்டது. இதில் தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான பிரச்சினை மட்டுமன்ற பெரும்பான்மை மக்களின் அரசியல் சார் பிரச்சினைகளும் உள்ளடக்கப்பட்டு அதற்கான தீர்வும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்கவும், மக்களின் அடிப்படை உரிமை களை பலப்படுத்தி புதிய அம்சங்களை அடிப்படை உரிமைகளாக இணைத்துக் கொள்ளவும் முயற்சிக்கப்பட்டது. இவ்வம்சங்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே மக்கள் விடுதலை முன்ன ணியின் நிலைப்பாடாகும்.

புதிய அரசியலமைப்பினை மஹிந்த தரப்பினர் எதிர்ப்பதற்கு பிரதான காரணம் அதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்படவேண்டும் என்பதுடன்,மாகாணசபைகளின் அதிகாரங்கள் அதிகரிக் கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையாகும்.

இவ்விடயத்தில் இவர்கள் குறிப்பிடும் வாதங்கள் பொருத்த மற்றதுடன் அரசியல் நோக்கமாகவே கருதப்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்கினால் இனவன்முறைகள் இடம்பெறும் என்று குறிப்பிட்டு இனவாத பிரச்சாரங்களை பகிரங்கமான பொதுநலவாதிகலாக முன்னெடுக்கின்றனர்.

நாட்டில் 30வருட காலம் இடம் பெற்ற சிவில் யுத்தத்திற்கு பிரதான காரணம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே . தமிழ் மக்கள் மீது இனவன்முறை செயற்பாடுகளுக்கு மறைமுகமாக நிறைவேற்று அதிகாரமே செயற்பட்டது அதன் விளைவே சிவில் யுத்தம் இடம் பெற்றது என்பதை ஏற்றுக் கொள்ள வே வேண்டும். மறுபுறம் மாகாணங்களுக்க அதிகாரங்களை பகிரும் பொழுது அங்கு தன்னாட்சி தோன்றி ஒரு பிரிவினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள்.

இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்றார்கள் ஆகவே அவர்களிடம் அதிகாரங் கள் செல்ல கூடாது என்பதற்காகவே இவ்விடயத்தையும் எதிர்க்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண த்தை தவிர்த்து உள்ள மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கலாம் என்று குறிப்பிட்டால் அதற்கு ஆதரவு வழங்கு வார்கள்.

இவ்வாறான முரண்பாடுகளின் மத்தியில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்டுவது சாத்தியமற்றதாகி விட்டது.

ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்யும் விடயத்திற்கு ஜனாதிபதி ஆதரவு வழங்க வேண்டும். அத்துடன் தனது கூட்டணியினருக்கும் இவ்விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும். அதனை விடுத்து மஹிந்த ராஜபக்ஷவின் தேவைகளுக்காகவும், அவரது அரசியல் விருப்பத்திற்காக செயற்படால் பதவியில் இருந்தும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த தவறிய ஜனாதிபதியாகவே இவர் கருதப்படுவார் என்றார்.