முல்லைத்தீவில் நிபுணர்கள் குழு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயில் இனம் காணப்பட்ட ட்றைபனசோமா என்னும் நோயின் தாக்கம் தொடர்பில் ஆய்வுகள் மூலம் கண்டறிய மத்திய சுகாதார கால்நடை அமைச்சின் சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ளனர்.

இலங்­கை­யில் பெரும் ஆபத்தை ஏற்­ப­டுத்­தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று முல்லைத்தீவில் நாய்­க­ளில் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ளதாகவும் இந்­த­ நோய் மனி­தர்­க­ளுக்­கும் பரவ வாய்ப்­புள்­ள­தாகவும் பேரா­த­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கால்­நடை பேரா­சி­ரி­யர் அஷோக் தங்­கொல்ல எச்­ச­ரித்திருந்தார்.

தெற்கில் பலாங்­கொடை மற்­றும் வடக்கில் முல்­லைத்­தீ­விலும் ட்றைப­ன­சோம என்று சந்தேகிக்கப்படும் நோய் நாய்­க­ளில் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. . இந்த நோய் மனி­தர்­க­ளுக்­கும் தொற்­றும் அபா­யம் உள்­ள­து.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசத்தில் தொற்றுள்ள நாய் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு குறித்த நோய் தாக்கம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதன் இரத்த மாதிரியும் ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரத்த ஆய்வு அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்பே நூறுவீதமாக உறுதி செய்ய முடியும். இருப்பினும் குறித்த தாக்கம் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து இது தொடர்பான நிபுணத்துவம் கொண்ட வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் நாளை மறுதினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இதன்போது குறித்த நாயைப் பரிசோதனைக்கு உட்படுத்துவர்.

அதேநேரம் குறித்த நாயில் நோய்த் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை அண்டிய பகுதிகளில் கானப்படும் நாய்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மேற்படி நோய் தாக்கம் இதுவரை எந்த மனிதரிலும் இனம் கானப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ட்றைப­ன­சோம என்ற நோய் நாய்கள் மூலம் பரவ ஒரு வகை இலை­யான் முக்­கிய காரணி என்று தெரி­விக்­கப்­படுகின்றது .

இலங்­கை­யில் இது­வ­ரை­யில் அந்­த­வகை இலை­யான் பதி­வா­க­வில்லை. குலெக்ஸ் என்ற நுளம்பு மற்­றும் இர­வில் மாத்­தி­ரம் வெளியே வரும் கிஸ்­ஸிங் பக் என்ற நுளம்­பால் இந்த நோய் பர­வி­யி­ருக்­க­லாம் என்றும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது என்று முல்லைத்தீவு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி கௌரிதிலகன் தெரிவித்தார்.