திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

பொகவந்தாலவின் தோட்டப் பகுதி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரேன தீ பற்றி எரிந்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தோட்ட மக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததோடு குறித்த சம்பவம் தொடர்பில் நோர்வுட் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதா அல்லது இயந்திர கோளாறு காரணமாகத் தீ பற்றி எரிந்ததா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த மோட்டார் சைக்கிள் 5 இலட்சம் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.