வட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக

வரதராஜப்பெருமாள் அதாவது முதலாவது வடக்கு,கிழக்கு இணைந்த மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் முதலாவது மகள் முதல் பெண் விமானி.

குறிப்பாக ,பயணிகள் விமான விமானியாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். பயணிகள் விமான ஓட்டியாக பணிபுரிவதற்கு சர்வதேசரீதியாக பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

குறிப்பாக பயணிகள் விமானியாவதென்றால் அதற்குமுன் பல ஆயிரம் மைல்கள் சிறுரக, அல்லது வேறுதேவைகளுக்காக பயன்படும் விமானங்களை ஓட்டிய அனுபவ சான்றிதழ் இருக்கவேண்டும்.

அவற்றையெல்லாம் தாண்டியே ஒரு பெரியளவிலான பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானத்திற்கான விமானியாக முடியும்.

அந்தவகையில் வரதராஜப்பெருமாள் அவர்களின் மகள் தமிழ் சமூகத்திலிருந்து முதல் பெண் விமானியாக பணியாற்றிக்கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும் என சமூக வலைத் தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.