யாழில் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சிறப்பு கலந்துரையாடல்

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்டுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடந்த வாரம் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இந்த சந்திப்பின் போதே குறித்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் யாழ். மாநகரத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பசுமை மாநகரை உருவாக்கும் செயற்றிட்டத்தில் முன்னாள் ஆளுநருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்தல் மற்றும் எதிர்காலத்தில் மாநகரில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் திரு. ஜெயசீலனும் கலந்துகொண்டுள்ளார்.யாழ் மாநகர சபை சார்பில் ஆளுநருக்கு கௌரவிப்புடன் கூடிய வரவேற்பும், நினைவுச் சின்னம் ஒன்றும் முதல்வர் மற்றும் ஆணையாளர் இணைந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.