விடுதலைப் புலிகளின் உத்தியை பாவிக்கும் தீவிரவாத அமைப்பு!! கொழும்பில் சென்ற அதி முக்கிய கருவிகள்

மாலியிலுள்ள இலங்கை இராணுவத்தின் அமைதிகாக்கும் படைகளிற்கு ஜாம்மர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் அவசர உத்தரவிற்கமைவாக, பாகிஸ்தானிலிருந்த கொள்வனவு செய்யப்பட்ட 8 ஜாம்மர் கருவிகள் மாலியிலுள்ள இலங்கை அமைதிகாக்கும் படைகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை அமைதிப்படையணியின் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரண்டு, இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.

மாலியிலுள்ள தீவிரவாத இயக்கம் நவீன தொழில்நுட்பங்களை பாவித்து கிளைமோர் தாக்குதல்களை நடத்துகிறது.

தொலைபேசியை இயக்கி குண்டுகளை வெடிக்க வைக்கும் விடுதலைப்புலிகள் பாவித்த தொழில்நுட்பத்தையும் பாவிக்கிறார்கள்.

இதனால், அங்கு அமைதிகாக்கும் படையணியில் உள்ள ஏனைய நாட்டு இராணுவத்தினர் ஜாம்மர் கருவிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

தொலைவிலிருந்து ரிமோட் கொன்ரோல் மற்றும் தொலைபேசி மூலம் குண்டுகளை வெடிக்க வைப்பதை ஜாம்மர் தடுக்கும்.

பாகிஸ்தானிலிருந்த ஜாம்மர் கொள்வனவு செய்ய முன்னரே திட்டமிடப்பட்டிருந்த போதும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் சிலர் அதில் ஆர்வம் காட்டவில்லையென தெரிகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய விசேட உத்தரவிற்கமைவாக, தற்போது எட்டு ஜாம்மர்கள் பாகிஸ்தானில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் கொழும்பில் பிரமுகர்களை குறிவைத்து இதேவிதமான தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருந்தபோது, பிரமுகர் வாகன தொடரணியில் பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய்த ஜாம்மர் கருவிகளை இணைத்தது பாதுகாப்பு துறை.

புலிகளின் கிளைமோர் தாக்குதல்களை ஜாம்மர் கருவிகள் கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.