மதுஷ் உடன் தொடர்பில் 80 அரசியல்வாதிகள் ...

மாகந்துரே மதுஷ் உடன் தொடர்பிலிருக்கும் அரசியல்வாதிகள் 80 பேரின் தகவல்கள் அரச புலனாய்வு துறை வசம் கிடைத்துள்ளது.

டுபாயில் வைத்து பாகிஸ்த்தான் குழுவொன்றுடன் வியாபார ரீதியாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே மதுஷ் குறித்த தகவல்கள் அரச புலனாய்வு துறைக்கு கிடைத்திருந்தது.

ஒன்றாக தூள் வியாபாரத்தில் ஈடுபட்ட இவர்களிடையே பல லட்சங்களுக்கான டொலர் பிரச்சனையினால் அவர்களுக்குள் முரண் ஏற்பட்டது.

அதனால் மதுசை பழி வாங்க அவர்களிடமிருந்தே மதுஷ் குறித்த தகவல்கள் நுல்லியமாக கிடைத்தது.

டுபாயில் நடக்கவிருந்த கொண்டாட்டம் மதுஷின் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம் என சொல்லப்பட்டாலும் , உண்மையில் அதிரடிப்படை லத்தீப் அவர்களது ஓய்வு குறித்த மகிழ்ச்சியில் நடத்தப்பட்ட கொண்டாட்டம் என்பது தெரிய வந்துள்ளது.

அன்றைய விருந்துக்கு அனைத்து பாதாள குழு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கொண்டாட்ட நிகழ்வைக் கூட வேறோருவர் பெயரிலேயே மதுஷ் ரிசர்வ் செய்திருந்தார்.

அன்றைய சுற்றி வளைப்பின் போது டுபாய் ஹோட்டலில் வைத்து 31 பேரும் வெளியில் வைத்து 14 பேரும் கைதாகினர்.