இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறியுள்ள கடற்பகுதி

அடுத்த சில நாட்களுக்கு (குறிப்பாக 11ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரை) நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதற்காக இலங்கையைச் சூழ சிவப்பு வளையமிட்டு திணைக்களம் எச்சரித்துள்ளது.

இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே திணைக்களம் மேற்படி எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன் தென் பகுதிகளில் மணித்திலாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரையான காற்று அதிகரித்துக் காணப்படும் என தெரிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

கடற்பிராந்தியத்தில் ஆபத்தான நிலைமை தோன்றியுள்ளதால் மீனவர்களும் கடற்படையினரும் மிகவும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.