தேர்தல் நடத்த நீதிமன்றத்தை நாடிய தேர்தல் ஆணையக்குழு? வெளியான அதிரடி அறிவிப்பு

தாமதப்பட்டுள்ள மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக வெளியான தகவலினை அந்த ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

தாமதப்பட்டுள்ள மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நீதிமன்றத்தை நாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பேராசிரியர் ரட்னஜீவன் கூல் ஸ்கைப் வழியாக இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தாகவும் கூறப்பட்டது.

இந்தநிலையில் இதுகுறித்து தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பேராசிரியர் ரட்னஜீவன் கூலிடம் தொடர்பு கொண்டு வினவியது, இதன்போது அவர் குறித்த தகவலை முற்றாக மறுத்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்தை நடாதிருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், மாகாண சபை தேர்தலை நடாத்துமாறு வலியுறுத்தி நீதிமன்றம் செல்லும் தரப்பின் மனுவில் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால், அந்த தரப்பிற்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பேராசிரியர் ரட்னஜீவன் கூல் தெரிவித்தார்.