ஐ.தே.கட்சியில் இணைந்த பிரபல பாடகர்!

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி பிரபல சிங்கள பாடகர் ரூகாந்த குணதிலக்க குருநாகல் மாவட்டம் - தம்பதெனிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரான முன்னாள் பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டதுடன், அவருக்கு குருநாகல் மாவட்ட தொகுதி அமைப்பபாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதனுடன், திலின பண்டார தென்னகோண், பஹத தும்பர தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், காவிந்த ஜயவர்தன கம்பஹா மாவட்ட தொகுதி அமைப்பராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் , வாரியபொல மற்றும் ஹிரியாகல தொகுதிகளுக்கான புதிய அமைப்பாளர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று முற்பகல் தமது நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.