தரம்குறைந்த தலைக்கவசங்கள் இறக்குமதிக்கு தடை! அமைச்சர் அறிவிப்பு

தரம்குறைந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இறக்குமதி செய்வது தடைசெய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்துகள் அதிகரித்தமையினால் ஏற்கனவே சந்தைகளில் காணப்படும் தரம்குறைந்த தலைக்கவசங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தரம்குறைந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இறக்குமதி செய்வது தடைசெய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு முழுமையாக முமையாக மறைக்கும் தலைக்கவசங்களுக்கும் அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.