குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடமைக்கும் பணிகள் ஆரம்பம்

குறைந்த வருமானமுடைய தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்கள் இரண்டிற்கு வீடமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி வவுனியா பம்பைமடு பிரதேசத்தினை சேர்ந்த தியாகராசா மூர்த்தி என்பவரின் குடும்பத்திற்கும் வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பமொன்றுக்குமே இவ்வாறு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன.

வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் வழிக்காட்டலில், புலம்பெயர்ந்தவர்களின் நிதிப்பங்களிப்போடு குறித்த வீடமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.