இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மநபரின் சடலம்! குழப்பத்தில் பொலிஸார்

காலி கொட்டாவை பிரதேசத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பிரதேசவாசிகள் மேற்கொண்ட அறிவிப்புக்கு அமைய குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , அவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தாதலால் காவற்துறை குழப்பத்தில் உள்ளனர்.பிரேத பரிசோதனைக்காக சடலம் கராப்பிட்டி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.