துறைமுக அபிவிருத்தி பணிகளை அமைச்சர் சாகல பார்வையிட்டார்

கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சரின் இந்த விஜயத்தின் போது ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

குறித்த விஜயத்தின் போது இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஜயபாலு முனையம், வேலை தளங்கள், மத்திய சமயல் அறை, தீ அணைப்பு நிலையம், களஞ்சியசாலை உள்ளடங்களாக துறைமுகத்தின் பல இடங்களை பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ அத்தியட்சகர் அத்துல ஹெவவிதாரன செயற்பாட்டு அத்தியட்சகர் ஜயந்த பெரேரா நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உழியர்கள் என பலர் இவ்விஜயத்தில் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.