எம்.ஐ. 17 ரக உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்ய ரஷ்யாவுடன் பேச்சு

ரஷ்யாவிடம் இருந்து எம்.ஐ. 17 ரக உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜெயதிலக, ஸ்புட்னிக் என்ற ரஷ்ய ஊடகத்திடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் பயன்படுத்துவதற்காக இந்த உலங்கு வானூர்திகளைக் கொள்வனவு செய்யும் திட்டம் உள்ளது.

இதன்நிமித்தம் நியமிக்கப்பட்ட குழு, தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் எவையும் கைச்சாத்திடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.