திருகோணமலையில் மோசமான செயலில் ஈடுபட்ட மூன்று இளம்பெண்கள்... நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 3 பெண்கள் உட்பட ஆணொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.திருகோணமலை, உப்புவெளியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் முன்னிலையில் சந்தேக நபர்களை இன்று முன்னிலைப்படுத்தியுள்ளனர்.இதன் போதே எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை-ஹொரவப்பொத்தானை, பிரதான வீதி வில்கம் பகுதியில் விபச்சார விடுதியொன்று இரகசியமாக நடாத்தப்பட்டு வருவதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.இதன்போது அவர்களை கைது செய்து விசாரணை செய்த வேளை விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை, அன்புவளிபுரம் மற்றும் அனுராதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.