பாதாள உலக தலைவர் மதுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டால் அசந்து போய்விடுவீர்கள்

டுபாயில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மதுஷின் சொத்துக்கள் 500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையதென பயங்கரவாத தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அந்தவகையில் மதுஷின் வங்கிக் கணக்குகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தற்போது சோதனைக்கு உட்படுத்தி வருகின்றது.

இதன்படி டுபாய் மற்றும் இலங்கை ஆகியவற்றிலுள்ள 23 வங்கி கணக்குகள் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெரோயின், கொக்கெய்ன் ஆகிய சட்டவிரோத செயற்பாடுகளில் பெற்ற பணம், கொலை ஆகியவற்றின் பெறப்பட்ட பணம் ஆகியவை அடங்களாகவே 500 கோடி ரூபாயை மதுஷ் வைப்பு செய்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.