ஐ.நாவில் இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகளிற்கு பேரிடியான செய்தி?

சித்திரவதைக்கு எதிராக ஐ.நாவின் அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளது பெயரும் அடங்குவதாக ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால் இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையென்றால் அது இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமெனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் கொள்கை மீதும் நம்பிக்கையற்றுப்போகுமெனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சித்திரவதைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதோடு, இலங்கை தொடர்பான விவாதம் மார்ச் 20ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.