ஜெனீவாவில் இலங்கைக்கு சார்பாக பிரித்தானியா அந்தர் பல்டி

மனித உரிமை பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகியது.

ஆரம்ப அமர்வில் உரையாற்றிய பொதுநலவாய மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களின் மேலும் காணிகளை விடுவித்தல் மற்றும் இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்தை நிறுவுதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் ஆகியனவும் வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை பிரித்தானியா ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழங்கும் வகையிலான தீர்மானமொன்றை பிரித்தானியா இக்கூட்டத்தொடரில் முன்வைக்க தீர்மானித்துள்ளது.

ஆனால், பிரித்தானியாவின் இத்தீர்மானத்திற்கு போரின்போது பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.