பாகிஸ்தானை கதற விட்ட இந்தியா! சீறிப் பாயும் கவிஞர் வைரமுத்தின் வரிகள்..

பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை வெடிகுண்டு வீசி அழித்துள்ள இந்திய விமானப்படை வீரர்களுக்கு கவிதை வாயிலாக பாராட்டு தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

"போர்மீது விருப்பமில்லை.

ஆனால், தீவிரவாதத்தின் மீது

தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே!

அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தியாவின் 12 மிராஜ் ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது வீசின. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் தங்கியிருந்த பாலாகோட் தீவிரவாத முகாம் மீதான தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் இத்தாக்குதலை பிரபலங்கள் பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து ட்வீட் மூலம் படை வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.