யாழில் தாயையும் மகனையும் அடித்து தூக்கு வீசிய மோட்டார் வாகனம்! பதற வைக்கும் காணொளி

வவுனியா யாழ் வீதி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் முன்பாகவுள்ள வெள்ளைக்கோட்டைக் கடக்க முற்பட்ட தாயும் மகனையும் வீதியில் சென்ற பட்டரக வாகனம் மோதித்தள்ளியதில், 2 வயது சிறுவன் ஆபத்தான நிலையிலும், தாய் தலையிலும் கால்களிலும் படுகாயமடைந்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,நேற்று பிற்பகல் செட்டிகுளம் மெனிக்பானம் பகுதியில் தாயின் சகோதரனுடன் தங்கியிருந்து கல்வி கற்று வந்த தனது மகனை தனது சொந்த இடமான நெடுங்கேணி ஊஞ்சால்கட்டிக்கு அழைத்துச் செல்வதற்காக ,

வீடியோவை காண

தனது மூன்று பிள்ளைகளுடன் புதிய பேரூந்து நிலையத்திற்குச் சென்ற தாய் தனது இருபிள்ளைகளையும் பேரூந்து நிலையத்தில் காத்திருக்குமாறு கூறிவிட்டு,

தனது 2 வயது சிறுவனை அழைத்துக்கொண்டு பிற்பகல் 3.15 மணியளவில் வைத்தியசாலைக்குச் சென்று சளிக்கு மருந்து பெற்றுக்கொள்வதற்கு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள வெள்ளைக்கோட்டினைக் கடந்து பாதி தூரம் சென்றபோது,

அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி சென்ற பட்டரக வாகனம் மோதியுள்ளது.இதன்போது தாய் சிறுவன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பட்டா வாகனம் பிள்ளைக்கு மேலாக சென்று வீதியின் ஓரமாக நின்றது.

இதன்போது அப்பகுதியில் நின்றவர்கள் ஓடிச்சென்று தாயையும் குழந்தையையும் தூக்கி சென்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் சிறுவன் (றுக்ஸன்) 2 வயது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய் (சின்னப்பு புன்சலாமேரி) 29 வயது தலையிலும் கால்களிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இவ்விபத்து தொடர்பாக வெள்ளைக்கோட்டிற்கு அருகிலுள்ள ரயர் கடையிலுள்ள சி.சி.ரி கமராவில் விபத்தை பார்வையிட்ட பொலிசார் பட்ட வாகனத்தின் சாரதியையும், வாகனத்தையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்