இந்த பெண்னை உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் உடனே தெரிவிக்கவும்

கெலும் இந்திக சம்பத் எனப்படும் கெவுமா எனும் சந்தேக நபரின் போதை பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பெண் சந்தேக நபரை கைது செய்வதற்கு காவற்துறை பொது மக்களின் உதவியை கோரியுள்ளது.

மொரட்டுவ - கடுபெத்த பிரதேசத்தினை சேர்ந்த நிரோஸா நில்மினி பெரேரா அல்லது துஸாரி எனும் பெண் என காவற்துறை தெரிவித்துள்ளது.

47 வயதுடைய குறித்த சந்தேக நபரான பெண் தொடர்பில் தகவல் அறிந்தால் களனி காவற்துறை உயர் அதிகாரி உபாலி ஜயசிங்கவின் 0718591589 எனும் கைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

கெவுமா எனப்படும் சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேலியகொட குற்றப்புலனாய்வு பிரிவு மூலம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.