பால்­மா­வுக்கு விலைச்­சூத்­தி­ரம் அமைச்சரவையில் அனுமதி

இறக்­கு­மதி செய்­யப்­ப­டும் பால்­மா­வுக்குப் பொருத்­த­மான விலை­யைக் காணும் நோக்­கில் நிய­மிக்­கப்­பட்ட குழு­வால் விலை சூத்­தி­ர­ மொன்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது.

பன்­னாட்­டுச்சந்­தை­யில் நில­வும் விலை தொடர்­பான விதி­களை கவ­னத்­தில் கொண்டு நுகர்­வோ­ருக்­கும் அர­சுக்­கும் பால்மா தொழிற்­து­றை­யில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கும் பெறு­பேறு கிடைக்­கும் வகை­யில் இறக்­கு­ம­தி­யா­கும் பால்­மா­வுக்கு விலை சூத்­தி­ர­மொன்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விலைச் சூத்­தி­ரத்தை நுகர்­வோர் அதி­கார சபை மூலம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக விவ­சாய கிரா­மிய பொரு­ளா­தார அலு­வல்­கள் கால்­நடை அபி­வி­ருத்தி நீர்­பா­சன மற்­றும் கடற்­றொ­ழில் மற்­றும் நீரி­யல் வள அமைச்­சர் பி.ஹெரி­சன் சமர்ப்­பித்த ஆவ­ணத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது.