பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் விசா­ரணை கோரும் பல்­க­லைக் கழக மாண­வர்

ஐக்­கிய நாடு­கள் பாது­காப்­புச் சபை­யின் ஊடாக பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் விசா­ரணை கோரும் பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளின் போராட்­டத்­துக்கு பல தரப்­பி­டம் இருந்­தும் ஆத­ர­வு­கள் குவிந்து வரு­கின்­றன.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சிவாலிப முன்­னணிஇலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வாலிப முன்­னணி இந்­தப் போராட்­டத்­துக்கு தனது ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யி­ன­ரால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது: இந்த எழுச்­சிப் பேர­ணிக்கு தமிழ் மக்­கள் எல்­லோ­ரும்; ஒன்­று­பட்டு ஒரே சக்­தி­யாய் ஐக்­கிய நாடு மனித உரி­மைப் பேர­வை­யி­டம் நீதி கோரிக் குரல் கொடுப்­போம். அர­சி­யல் வேறு­பாடு இன்றி அனைத்­துத் தரப்­புக்­க­ளும் பங்கு கொள்­ளு­மாறு அன்­பு­டன் அழைக்­கின்­றோம். போர் முடிந்து பத்து ஆண்­டு­கள் சென்­றும் தமிழ் மக்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­கள் தொடர்ந்­தும் தீர்க்­கப்­ப­டா­மலே உள்­ளன. காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­கள் விடு­விப்பு, காணா­மல் போன­வர்­க­ளுக்­கான தீர்வு மற்­றும் பொறுப்­புக் கூற­லில் இருந்து எல்­லா­வற்­றை­யும் அரசு தட்­டிக் கழித்து வரு­கின்­றது. ஐக்­கிய நாடு மனித உரி­மைப் பேர­வை­யி­னால் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளைக் கூட அரசு நடை­மு­றைப்­ப­டுத்­தா­மல் காலத்தை இழுத்­த­டித்து வரு­கின்­றது. எனவே தமிழ் மக்­க­ளா­கிய நாம் அனை­வ­ரும் வேறு­பா­டின்றி ஓர­ணி­யில் நின்று எமது உரி­மைக்­காக குரல் கொடுப்­போம் – என்­றுள்­ளது.

தமிழ் தேசிய மக்­கள் முன்­னணிதமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும் இந்­தப் போராட்­டத்­துக்கு தனது ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது:

இலங்­கை­யில் போர் இடம்­பெற்ற காலத்­தில் இரா­ணு­வம் மற்­றும் துணை இரா­ணு­வக் குழுக்­க­ளால் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் நிலை என்ன என்­பது போர் முடிந்து 10 ஆண்­டு­க­ளா­கி­யும் தெரி­யா­ம­லுள்­ளது. இலங்­கை­யில் இடம்­பெற்ற வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­கள் உள்­ளிட்ட மனி­தத்­து­வத்­து­வத்­துக்கு எதி­ரான குற்­றங்­கள், போர்க்­குற்­றங்­கள், இன­வ­ழிப்­புக் குற்­றங்­கள் தொடர்­பில் பக்­கச்­சார்­பற்ற விசா­ர­ணை­களை ஐ.நா பாகாப்­புச் சபை ஊடாக பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றில் அல்­லது சிறப்­புக் குற்­ற­வி­யல் தீர்ப்­பா­யம் ஒன்­றின் மூலம் முன்­னெ­டுக்­க­பட வேண்­டும் என வலி­யுத்­தும் தீர்­மா­னத்தை ஐ.நா மனித உரி­மை­கள் பேர­வை­யில் நிறை­வேற்­றப்­ப­டல்; வேண்­டு­மென வலி­யுத்தி யாழ் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள மாபெ­ரும் மக்­கள் எழுச்­சிப் போராட்­டத்­திற்கு தமிழ் தேசிய மக்­கள் முன்­னணி (அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸ்) கட்­சி­யி­ன­ரா­கிய நாம் பூரண ஆத­ரவு தெரி­வித்­துக் கொள்­கின்­றோம் – என்­றுள்­ளது.

தமிழ் மக்­கள் கூட்­டணிபல்­க­லைக் கழக மாண­வர்­க­ளின் போராட்­டத்­துக்கு தமிழ் மக்­கள் கூட்­ட­ணி­யும் தனது ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது:

வடக்கு கிழக்­கின் சகல பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளின் ஒருங்­கி­ணைப்­பில் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக வளா­கத்­தில் இருந்து யாழ் முற்­ற­வெ­ளியை நோக்கி நடை­பெற இருக்­கும் கண்­டன ஆர்ப்­பாட்­டப் பேர­ணிக்­கும் மட்­டக்­க­ளப்­பில் எதிர்­வ­ரும் 19ஆம் திகதி செய்­வாய்க்­கி­ழமை காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் அமைப்­பி­னால் மேற்­கொள்­ளப்­ப­டும் கத­வ­டைப்பு மற்­றும் மாபெ­ரும் கவ­ன­யீர்ப்­புப் பேர­ணிக்­கும் தமிழ் மக்­கள் முழு­மை­யான ஆத­ரவை வழங்க வேண்­டும் – என்­றுள்­ளது.