பல்கலைக்கழக மாணவர்கள் சவால்.!!

2009 யுத்தம் இறுதி கட்டத்தில் நடைபெற்ற போது தமிழகத்தில் மக்கள் நமக்காக போராடினார்கள் தீ குளித்து உயிர் கொடையும் செய்தார்கள் எமது புலம்பெயர் உறவுகள் சிலர் ஒருபுறம் நமக்காக போராட்டம் நடத்தினர்.

அங்குள்ள சில தமிழின துரோகிகள் எப்போது சண்டை முடியும் புலிகளின் சொத்துக்களை எப்படி சூரையாடலாம் என காத்திருந்தனர்.

அப்படி சேர்ந்த சொத்துக்கள் 10 வருடங்களில் குறைந்திருக்கலாம் அதனால் தான் இவ்வாறான வதந்திகளை பரப்பி எமது பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பை கெடுத்து இன விடுதலைப் போராட்டத்தை குழப்பி இதன்மூலமும் சிங்கள பேரினவாத அரசிடம் இலாபம் அடைய முயற்சிக்கின்றனர்.

நாம் அனைவரும் தமிழ் தாயின் பிள்ளைகளாய் ஓரணியில் நின்று ஜெயித்து காட்டுவோம்.